1. அறத்துப்பால் 1.1 பாயிரவியல் 1.1.1 கடவுள் வாழ்த்து 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு . 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் . 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் . 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல . 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு . 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் . 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது . 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது . 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை . 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் ...